“நாட்டு விவகாரங்களில் தலையிடாதே” – அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா..!

637

தங்கள் நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள சிறுபான்மையினர் மக்களின் உரிமை நசுக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், சீனா மீது பொருளாதார தடை, சீனா அதிகாரிகள் அமெரிக்கா வர அனுமதி மறுப்பது போன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க முடியும். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தொடர்ந்து தங்களது உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை பொறுத்த கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.

Advertisement