அமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்

387

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா கடந்த சில காலமாக வர்த்தகப்போரில் ஈடுபட்டு வருகிறது.

சீனாவின் ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.

அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் மூண்டது. வர்த்தகப்போருக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் சீனா உடனான வர்த்தகப்போர் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:

வர்த்தக போர் காரணமாக சீனாவின் ஏற்றுமதி அளவு கனிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பொருளாதாரம் அதாள பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆனால் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வர அந்நாடு அமெரிக்காவுடன் மீண்டும் சுமுகமான வர்த்தகம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of