பிரபல நிறுவன பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீனா முடிவு

243

அமெரிக்காவின் The Newyork Times தி நியூயார்க் டைம்ஸ்,  The Washington Post. தி வா‌ஷிங்டன் போஸ்ட்,  The Wall Streat Journol தி வால் ஸ்ட்ரிட் ஜர்னல் ஆகிய பத்திரிகைகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீனா முடிவு எடுத்துள்ளது.

அமெரிக்க நாட்டில் இருந்து கொண்டு சீன பத்திரிகையாளர்கள் பணிபுரிவதில் டிரம்ப் நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

குறிப்பாக சீன பத்திரிகையாளர்கள் எண்ணிக்கையை குறைத்து டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும், அமெரிக்காவில் உள்ள சீன பத்திரிகை நிறுவனங்கள், அந்த நாட்டில் உள்ள தங்களது பணியாளர்கள், சொத்துக்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டிய நிலையையும் உருவாக்கியது.

இது சீனாவுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்காவின்  The Newyork Times தி நியூயார்க் டைம்ஸ்,  The Washington Post. தி வா‌ஷிங்டன் போஸ்ட்,  The Wall StreatJournol தி வால் ஸ்ட்ரிட் ஜர்னல் ஆகிய பத்திரிகைகளை சேர்ந்த பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீனா முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில்,  சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர்களை வெளியேற்ற சீன  அரசு முடிவு செய்துள்ளது என்றும், இது சீனாவைப்பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்காமல் மக்களை தவிக்க விடும் நிலையை ஏற்படுத்தும்  என தெரிவித்துள்ளது.

இந்த முடிவை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of