இந்தி பாடல்களை எல்லையில் ஒலிக்கவிடும் சீன ராணுவம்..! ஏன் தெரியுமா..?

463

இந்திய ராணுவத்தின் மீது சீனாவின் ராணுவ வீரர்கள், அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, இந்திய ராணுவமும் எதிர் தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, லடாக் எல்லை பகுதியில் பரபரப்பான சூழ்நிலையே நிலவி வருகிறது. எல்லையில் அமைதி திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் இருதரப்பிலும் இந்த வாரமே தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஃபிங்கர் 4 பகுதியில் பெரிய ஸ்பீக்கர்களை வைத்து சீன ராணுவத்தினர் பஞ்சாபிப் பாடல்களை ஒலிக்கவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்களை திசைதிருப்புவதற்காக சீனா இந்த முயற்சியைச் செய்துவருவதாகச் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும், உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்பதை உணர்த்துவதற்காகவும் இப்படி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோன்று, 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தோ-சீனா போரின்போது, சீன ராணுவ வீரர்கள், இந்தி பாடல்களை ஒலிக்கவிட்டதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement