சீனப்பட்டாசு வாங்குபவர்களின் கவனத்திற்கு..! அரசின் மிரட்டலான உத்தரவு..! மகிழ்ச்சியில் உள்ளூர் தொழிலாளர்கள்..!

210

சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது, விற்பனை செய்வது, வாங்குவது உள்ளிட்டவை தண்டனைக்குறிய குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட சிவப்பு லெட், காப்பர் ஆக்சைட் உள்ளிட்ட ரசாயன பொருட்களால் சீன பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும், இதனால், இந்த பட்டாசுகளை பயன்படுத்தும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

சீன பட்டாசுகளை வாங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரமும், நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் சீன பட்டாசுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சுங்கத்துறை, சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் தொடர்பாக, 044-25246800 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சுங்கத்துறை அறிவித்துள்ளது.