11 பேர்..! 23 முறை திருமணம்..! அதுவும் குடும்பத்துகுள்ளயே..! காரணம் கேட்ட மயங்கிடுவீங்க..!

2094

சீனாவின் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள சிறு கிராமத்தில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக வீடு கட்டித்தர அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது மக்கள வசிக்கும் இடத்தை அரசு எடுத்துக்கொண்டு வேறு இடத்தில் புதியதாக வீடு கட்டிக்கொடுக்கப்படும்.

மக்களுக்கு சொந்தமாக நிலம் இருந்தாளும், இல்லையென்றாலும் வீடு கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை பான் என்பவரும், அவரது குடும்பத்தினரும் குறுக்கு வழியில் பயன்படுத்தி நிறைய வீட்டினை வளைத்து போட திட்டம் போட்டனர்.

பேன் என்பவர் அந்த கிராமத்தில் வசித்து வருபவர். இவருக்கு கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான் விவாகரத்தானது. அரசாங்கம் வீடு தரும் அறிவிப்பை அறிந்த இவர், விவாகரத்தான தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்து அந்த சான்றிதழை வைத்து ஒரு வீடு வாங்கியுள்ளார்.

பின்னர் தனது மனைவியை மீண்டும் விவாகரத்து செய்துவிட்டு, தனது அண்ணியையும் திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது அண்ணியை விவாகரத்து செய்து விட்டு, அண்ணியின் தங்கையையும் திருமணம் செய்துள்ளார்.

இதனையறிந்த பேனின் குடும்பத்தினர், இந்த ஐடியாவை அவர்களும் பயன்படுத்தினர். பேனின் தந்தை, அவர்களது குடும்பத்தில் சில பெண்களை இவ்வாறாக மாற்றி மாற்றி திருமணம் செய்தது விவாகரத்து செய்தார். கடைசியில் தனது சொந்த தாயையும் திருமணம் செய்து விவாகரத்து செய்த அவர் வீடுகளை வாங்கியுள்ளார்.

இதுபோன்று பேனின் உறவினர்கள் 11 பேர் 23 முறை திருமணம் செய்து, விவாகரத்து செய்துள்ளனர். இந்த விஷயம் அக்கிராம மக்களுக்கு தெரியவரவே, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம்செய்யப்பட்டது உறுதியானதைத்தொடர்ந்து, அவர்கள் 11 பேரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of