“இதுக்கும் சேர்த்து ஒரு டாக்டர் பட்டம் தாங்க..” மீண்டும் வைரமுத்துவை சீண்டும் சின்மயி..!

669

சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் சார்பில் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், 9 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.

மேலும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவர்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும், வெளியில் சொன்ன தனக்கு தான் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்மயி அந்த டுவீட்டில் தெரிவித்தார்.

வைரமுத்துவின் மொழி ஆளுமைத்திறனுக்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது என்பதை தான் ஒப்புக்கொள்வதாகவும், அத்துடன் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் வைரமுத்துவுக்கு ஒரு டாக்டர் பட்டம் தரலாம் எனவும் சின்மயி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of