விஸ்வாசம் படத்தை லேட்டா பார்த்துட்டு.., சின்மயி பேசுற பேச்ச பாருங்க..!

1162

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தல அஜித். தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளம் இருந்தும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கும் ஒருசில நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவரது திரைப்படம் வெளியாகும் போது, திரையரங்குகளை திருவிழா போல் அவரது ரசிகர்கள் மாற்றி விடுகின்றனர். கடந்த பொங்கல் அன்று அஜித் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. பலரும் திரையரங்கை விட்டு வெளியேறும் சிறு கண்ணீரோடு தான் வெளியே வந்தனர்.

அந்த அளவுக்கு பேமிலி ஆடியன்சை இந்த படம் ரசிக்க வைத்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தைப் தற்போது பாடகி சின்மயி பார்த்துள்ளார். இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

விஸ்வாசம் படத்தை இப்போதுதான் பார்த்தேன். இந்த படம் எனது மனதை பெருமளவில் கவர்ந்தது.

மேலும் இந்த படம் எனக்கு பெரும் மகிழ்ச்சியை தந்ததுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலர் இந்த படத்தையே இப்போது தான் பார்த்தீர்கள் என்றால், நேர்கொண்ட பார்வை படத்தை எப்போது பார்ப்பீர்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of