வைரமுத்துவை மீண்டும் வம்பிழுத்த சின்மயி!!

394

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு, பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில், ராணுவ வீரர்களை பாராட்டி டுவீட் செய்துள்ளார். அதில்,

“போர்மீது விரும்பமில்லை. ஆனால் தீவிரவாத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! ஆசகாய சூரர்களே அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த பாடகி சின்மயி,

“இதற்கு முந்தைய ராணுவ தாக்குதல் பற்றி அவர் எந்த பாராட்டுகளையும் தெரிவித்தது இல்லை. சுனாமி, ஓக்கி புயல் போன்ற எதற்கும் நிதியுதவியும் அளித்தது இல்லை. ராணுவம், பாஜக-வை புகழ்ந்தால் ஆதரவு கிடைக்கும் என்று அவர் நினைக்கலாம்”

என்று தெரிவித்துள்ளார்.

சின்மயி, மீடூ என்ற ஆஷ் டேக் மூலம் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.