புகார் அளிக்க வந்தவருக்கு பளார் – காவல்துறை துணை ஆய்வாளரின் வைரல் வீடியோ!

1868

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் ஒருவரை போலீஸ் தாக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், போலீஸ் ஸ்டேஷனில் இளைஞர் ஒருவர், உள்ளே நுழைகிறார்.

கையில் ஒரு புகார் மனு வைத்துள்ளார். அங்கே உட்கார்ந்திருந்த ஒரு போலீசிடம் மனுவுடன் வந்து நிற்கிறார். ஆனால் அந்த போலீஸ் வேறு ஒரு வேலையில் மூழ்கி உள்ளார். அதுவரை அந்த நபர் காத்திருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து என்ன விவரம் என்று கேட்க, இளைஞர் தன் புகாரை தெரிவிக்கிறார். அப்போது, அங்கு வந்த காவல்நிலைய எஸ்ஐ சண்முகம் அந்த நபரை பார்த்து கொதித்து போய் விடுகிறார். அவரிடம் முழுமையான விசாரணைகூட நடத்தவில்லை.

ஒரு சில நிமிடங்களில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த இளைஞரை திட்டிவிட்டு, பளார் பளார் என்று கன்னத்தில் அறைகிறார். இதை ஸ்டேஷனில் இருந்த மற்ற போலீசாரும் பார்த்து கொண்டே நிற்கின்றனர்.

இந்த வீடியோதான் வைரலாகிறது. இதுகுறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், ஒரு காவலர் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதும், அந்த இளைஞரை தாக்கியதும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
சண்முகராஜ் Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
சண்முகராஜ்
Guest
சண்முகராஜ்

இந்தக் கொடிய மிருகத்துக்கு தான் பதவி உயர்வு கிடைக்கும் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள் தரக்குறைவான தலைவர்கள் என்று எப்பொழுது உணருவோம்