சின்னத்தம்பி யானையை முகாமில் பிடித்து வைக்க நடவடிக்கை – வனத்துறை தகவல்

81
chinathambi elephant

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

சின்னத்தம்பி யானை கடந்த சில நாட்களாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதாக மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த யானை தொடர்ந்து பலபகுதிகளில் உலா வருகிறது. இந்த யானையை காட்டுக்குள் அனுப்ப வனத்துறை பல்வேறு முயற்சி செய்தனர். இந்த முயற்சி தோல்வியடையவே சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கு வனத்துறை முடிவு செய்தனர்.ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை சின்னத்தம்பி யானை குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

மேலும் இதுகுறித்து வனத்துறையினர் தெரிவிக்கும்பொழுது,

சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லையெனவும், யானையை காட்டுக்குள் அனுப்ப முயற்சி செய்தும் மீண்டும் ஊருக்குள் வந்துவிடுவதாக கூறினர்.மேலும் முகாமில் வைத்து பராமரிக்கவே சின்னத்தம்பி யானையை நிபுணர்களும் பரிந்துரைத்துள்ளதாகவும் வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி சின்னத்தம்பி யானையை மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதில் சிரமம் உள்ளது என தெரிவித்த நிபுணர் அஜய் தேஜாஸி, சின்னத்தம்பி யானையை முகாமில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்கவும் முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.