கார்ல் கூப்பறை பின்னுக்கு தள்ளிய கிறிஸ் கெய்ல் – புதிய சாதனை

599

தென்ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 15-வது லீக் ஆட்டம் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர் ஹசிம் அம்லா 7 பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் காட்ரெல் பந்தில் கிறிஸ் கெய்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஹசிம் அம்லாவை கேட்ச் செய்ததன் மூலம் அதிக கேட்ச் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் பீல்டர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார்.

இதற்கு முன் கார்ல் கூப்பர் 120 கேட்ச் பிடித்துள்ளார். இதை கிறிஸ் கெய்ல் இன்று முறியடித்துள்ளார். பிரையன் லாரா 117 கேட்ச் பிடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

Advertisement