அப்ரிடியை தூக்கிப்போட்ட கிறிஸ்கெய்ல்.., முடிஞ்சா அடிச்சி பாரு!

835

தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணியிலும் தனக்கென ரசிகர் பட்டாலத்தை கொண்டவர் கிறிஸ்கெய்ல். இவர் களத்தில் விளையாடத்தொடங்கினால் நடுவர் ஒரு கையை தூக்குவதை விட அதிக நேரம் இரண்டு கைகளை தான் உயர்த்த வேண்டி இருக்கும்.அந்த அளவிற்கு பந்து வீச்சாளர்களையும், சக வீரர்களையும் தன்னுடைய சிக்சர்கள் மூலம் மிறள வைத்துள்ளார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த சகீத் அப்ரிடி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் சேர்ந்து 476 சிக்கர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தார்.

இதனை முறியடிக்கும் வகையில், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் கிரிஸ்கெய்ல் 476 சிச்சருடன் அதே நிலையில் இருந்தார். ஆனால், நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் 12 சிக்சர்களை அடித்து முதல் இடத்தில் இருந்த அப்ரிடியை பின்னுக்கு தள்ளினார்.

இதுவரை 444 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில், ஒருநாள் போட்டியில் 287 சிக்சர்களும், டி20 போட்டியில் 103 சிக்சர்களும், டெஸ்ட் போட்டியில் 98 சிக்சர்களையும் அடித்துள்ளார்.

Advertisement