”தலைவன் படம் பாக்கமலே போறேன்” ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்

768

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமில்லாமல் அண்டை மாநிலகளிலும் ரசிகர் கூட்டம் திராளாய் உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அடுத்துள்ள ரிஷி வந்தியத்தில் பாலமுருகன் என்ற விஜய் ரசிகர் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டார்.

அவருக்கு வயது (21). தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பாலா கடைசியாக ஆகஸ்ட் 11-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில் சில கண்ணீர் வரும் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினை பார்த்த பலர் இதனை காமெடியாகவும், சில ஆறுதல்களையும சொல்லி வந்தனர். அதில் பாலா பதிவிட்ட பதில் தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா என்று பதிவிட்டுள்ளார்.

அதில் தளபதி விஜய் பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். மற்ற ட்விட்டர் பதிவில் இங்கே இருக்கிறவர்களுக்கு என்னை பிடிக்குமா என்றும், நான் கேவலமானவனா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பாலா.

இந்நிலையில் நான் இறந்தால் ஹேஷ்டேக் டிரேன்ட பண்ணுங்க என்று சொல்லி தனது உயிரை மாய்த்து கொண்டார்.

மேலும் தளபதி ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் தளபதி ரசிகர்கள் மற்றும் திரைதுறையினர் நடிகர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் மற்றும் நடிகர் சாந்தனு உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் இந்த #RIPBala என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல கருத்துகளையும் தனது இரங்கலையும் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் கள்ளகுறிச்சி மக்கள் இயக்க தலைவரிடம் போனில் தொடர்பு கொண்ட விஜய். உயிரிழந்த பாலமுருகனின் தாய் மற்றும் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Advertisement