எனக்கு எப்போதும் பட வாய்ப்புக்கள் குறைந்ததில்லை

140

தம்மன்னா, பாலிவுட் படத்தின் மூலம் 2005ம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமானார். 2006ம் ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு அறிமுகமான தம்மன்னா ஆரம்பகாலத்தில் சற்று தடுமாறினாலும் விரைவில் தனக்கென்று தனி இடத்தை அவர் பிடித்தார். தற்போது, தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், அவ்வப்பத்து இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில், “எனக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. கடந்த ஆண்டில் கைநிறைய படம் வைத்து இருந்தேன் என்று கூறினார்.

அதை தொடர்ந்து பேசிய அவர், அண்மைக்கலாமாக மீ டூ என்ற ஒரு மிக பெரிய விஷயம் சினிமாத்துறை மட்டும் இன்றி எல்லா துறையிலும் வேர்விட்டுள்ளது, ஆனால் அதிர்ஷட வசமாக நான் இதுவரை அதை எதிர்கொள்ளவில்லை என்றார். மேலும் இதற்கு உள்ளாகும் பெண்கள் அழுதுகொண்டு சோர்ந்துவிடாமல் எழுந்து நின்று போராட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of