சினிமாவிற்கு தணிக்கை என்பது தேவையில்லை | – வீடியோ உள்ளே

161

நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் அமலா பால் நடித்து வெளிவர இருக்கும் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய நடிகர் எஸ்.வி.சேகர் பேசியபோது, சினிமா எடுப்பதற்கு இன்று நல்ல சுதந்தரம் உள்ளது, முன்பெல்லாம் மலையாள சினிமாவில் மட்டும்தான் கதைக்களம் நன்றாக இருக்கும், மலையாளப் படங்களின் புகைப்படக் கலைஞனாகத்தான் நான் முதலில் சினிமாவிற்குள் வந்தேன் என்று கூறினார்.

1970 களில் 10 லட்சத்தில் முழு படத்தை முடித்து விடுவோம், ஆனால் இன்று அப்படியில்லை. தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதன் மூலம் தயாரிப்பாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். சினிமா அரசியல் இரண்டிலும் உள்ளே வந்த பிறகுதான் கற்றுக் கொள்கின்றனர்.

தற்போது தயாரிப்பாளர், நடிகர் சங்கங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் 30 கோடி முறைகேடும், தயாரிப்பாளர் சங்கத்தில் 13 கோடி முறைகேடும் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது என்று கூறினார்.

ஆடை போன்ற படத்தில் நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். சினிமாவிற்கு தணிக்கை தேவையில்லை என்பதே என் கருத்து, தொலைக்காட்சிக்குத்தான் தணிக்கை வேண்டும் .இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிற விளம்பரங்கள் கூட தவறானவையாக இருக்கின்றன என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of