குடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..!

668

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, அசாம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாற்றியுள்ளன.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை சட்டத்திருத்தத்தால், வடகிழக்கு மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாது என விளக்கம் அளித்தார்.

குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேறி உள்ளதை காங்கிரஸ் கட்சியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என கூறிய அவர், வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of