மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்

208

மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எந்த மதத்திற்கோ, சிறுபான்மையினருக்கோ எதிரானது அல்ல. மசோதாவில் பாகுபாடுகள் காட்டப்படவில்லை.

பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட 6 மத அகதிகள் குடியுரிமை பெற இந்த மசோதா அனுமதி அளிக்கும்.

இந்த அகதிகள் குடியுரிமை பெறுவதற்கு அவர்களின் பெற்றோர் பிறந்த இடம் தொடர்பான ஆதாரம் தர வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கியிருந்தால் குடியுரிமை பெற முடியும். மசோதா தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து அதனைக்குறித்து விளக்கம் அளித்து உரையாற்றினார்.  அதனை தொடர்ந்து மக்களவையில் நடைபெற்ற குடியுரிமை சட்டதிருத்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக 311 பேரும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்ட பின் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில்

மக்களவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும்,   மசோதாவின் அனைத்து சிறப்பு அம்சங்கள் குறித்து அமித்ஷா விளக்கம் அளித்தது மிகுந்த பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of