குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : குடியரசுத்தலைவர் ஒப்புதல்

519

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அதைதொடர்ந்து மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement