சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் இன்று தொடக்கம்

594

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 789 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்காக கடந்த ஜூன் 3ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வை சுமார் 3 லட்சம் பேர் எழுதினர்.

இந்த தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து 9ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 24 நகரங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடைபெறுகிறது.

சூளைமேடு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.