மேற்கு வங்கத்தில் மீண்டும் பாஜக – திரிணாமுல் காங்கிரஸாரிடையே மோதல்

249

மேற்கு வாங்காளத்தில் கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது திரிணாமுல் காங்கிரஸ் – பா.ஜனதா தொண்டர்களில் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

திரிணாமுல் காங்கிரஸ் – பா.ஜனதா மோதல்: மேற்கு வங்காள தேர்தலில் வன்முறை
பாராளுமன்ற தேர்தலில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று நடந்து வருகிறது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பல இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக கட்சியின் 2 வேட்பாளர்களின் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதேபோல் வடக்கு கொல்கத்தாவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. சில வாக்குச்சாவடிகளில் பூத்தை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான வன்முறை நிகழ்ந்தது.இதனைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஏற்கனவே 6-கட்ட தேர்தலின் போதும் மேற்கு வங்காளத்தில் வன்முறை ஏற்பட்டது. கடைசி கட்ட பிரச்சாரத்தில் மோதல் ஏற்பட்டதால் பிரசாரம் ஒரு நாளைக்கு முன்பாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இதேபோல பஞ்சாபிலும் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of