ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை திருக்குறள் வாசிக்கும் மணிக்கூண்டு..!

450

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரெஞ்சு மணிக்கூண்டு ஒன்று அமைந்துள்ளது.

இந்த மணிக்கூண்டு கடந்த சில வருடங்களாக பராமரிப்பில்லாமல் கிடந்ததால், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் நிதி ஒதுக்கி, மணிக்கூண்டு புனரமைத்து ஜனவரி தொடக்கத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அந்த மணிக்கூண்டில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை திருக்குறள் வாசிக்க வையாபுரி மணிகண்டன் ஏற்பாடு செய்தார்.

இதனால் தமிழ் அமைப்புகள் சார்பில் பிரெஞ்சு மணி கூண்டில் திருக்குறள் வாசிக்க ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, சட்டமன்ற உறுப்பினருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர்.

Advertisement