பிளாஸ்மா தெரபி அறிமுகம் – முதலமைச்சர் அறிவிப்பு

223

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 முதல் 65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்த நோய், சர்க்ரை நோய், இருதய நோய், உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் அதிகபட்சமாக 2 முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க முடியும். ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவ துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், திருச்சி, கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of