முதல்வரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு

337

தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, முதல்வருக்கும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of