காவிரி விவகாரத்தில் செயல்பட்டது போல் மேகதாது விவகாரத்தில் செயல்பட வேண்டும்

477

காவிரி விவகாரத்தில் செயல்பட்டது போல் மேகதாது விவகாரத்தில் செயல்பட வேண்டும் என அ.தி.மு.க எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி, காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக நாடாளுமன்றத்தை முடக்கி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது போன்று, மேகதாது அணை கட்டும் விவகாரத்திலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தினார்.