கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட மக்களுக்கு தார்பாய் வழங்க முதல்வர் உத்தரவு

389
edappadi-palanisamy-cm

கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்க அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ள கஜா புயலால் பெரும்பாலான இடங்கள் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. வீடு மற்றும் உடமைகளை இழந்த மக்கள், உணவு கூட கிடைக்காத ஒரு சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாவட்டங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பலர் நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்கிவறுகிறனர். அரசு தரப்பில் இருந்தும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தற்காலிக கூரை அமைக்க தார்பாய் வழங்க 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of