“சட்டமன்றம் நடந்தால் தான்..” ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் நச் பதில்..!

299

சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கொரோனா வைரஸ் அச்சத்தால், எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லிவிட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஒருவர் தன் வீட்டின் முன் யாரும் வரவேண்டாம் என்று பலகை வைத்துள்ளதை சுட்டிகாட்டிய ஸ்டாலின், அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ளபோது, நாம் ஒன்றுகூடி விவாதிப்பது சரியா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, சட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுப்படுத்த முடியும் என்றும் இங்குதான் மக்கள் பிரச்சனை பற்றி பேச முடியும் எனவும் தெரிவித்தார்.

சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத்தை ஒத்திவைக்க கோருவது பீதியை ஏற்படுத்த அல்ல என்றும் இந்த நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே தான் என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of