MGR-க்கு காவித்துண்டு.. OPS-ஐ தொடர்ந்து முதல்வரின் அடுத்த மூவ்..!

483

அதிமுகவின் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமானவர் எம்.ஜி.ஆர். புதுச்சேரியில் உள்ள இவரது சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவித்துண்டு அணிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த செயலுக்கு ஏற்கனவே துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், எம்.ஜி.ஆரின் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement