மருத்துவர் தினம் – முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

140

மனித உயிர்களை காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டுவரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தேசிய மருத்துவர் தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமை உணர்வுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் மருத்துவர்களின் பணியை நாடே போற்றிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.மருத்துவர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேரிடர் காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகரில்லை என்றும் முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மனித உயிர்களை காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டுவரும் மருத்துவர்களி்ன் வாழ்வு சிறக்க மருத்துவர் தினத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of