மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க பரிசீலனை – முதலமைச்சர் பழனிசாமி

304

நாகை – வேளாங்கண்ணியை அடுத்த ஒரத்தூர் கிராமத்தில் 365 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

நாகை, ஒரத்தூர்  பகுதியில், 60 ஏக்கர் பரப்பில், 365 கோடி ரூபாய் மதிப்பில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில், முதலமைச்சர் பழனிசாமி புதிய மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், மக்களின் கோரிக்கையை துரிதமாக பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of