“தமிழக மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்குத்தான் வாய்ப்பு” – முதலமைச்சர் அதிரடி

303

திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 338 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மருத்துவ கல்லூரிகளில் 85 சதவீத தமிழக மாணவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றார்.

அகில இந்திய கோட்டாவில் 15 சதவீத இடங்கள் மட்டுமே வேறு மாநிலத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அகில இந்திய கோட்டாவில் அதிக மதிப்பெண் பெற்று தமிழக மாணவர்களும் சேர முடியும் எனவும் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, சரோஜா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of