வேளாண் மசோதாவிற்கு ஆதரவு ஏன்..? முதல்வர் விளக்கம்..!

651

மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, வேளான் தொடர்பான 3 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாக்களுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, அதிமுக சார்பில் மக்களவையில் மசோதாவிற்கு ஆதரவு அளிக்கப்பட்டது. ஆனால், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், வேளான் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை எதிர்க்கட்சியினர் பலர் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், ராமநாதபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்தது என்றும், வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்து பேசியது குறித்து அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அதிமுக எதிர்க்கும் என்றும் தெரிவித்தார். கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, அதிமுக ஆட்சியே தொடரும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.