“அதெல்லாம் நிறுத்தப்படவில்லை..” – முதல்வர் பழனிச்சாமி

249

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ஓசூரில் சுமார் 20 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற கொரோனா தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் தொடக்கஉரையாற்றிய முதல்வர்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது என்று கூறினார்.

ஓசூரில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை கொண்டுவருகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்புப்பணிகளுக்காக பத்தாயிரம் கோடிரூபாய் வரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளனது என்று கூறினார்.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை என்று கூறினார். மலைக்கிராமங்களில் சோலார் மின்விளக்குகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of