என் கோழிகள் 28 குஞ்சுகள் பொறித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

552

சென்னையில் உள்ள தனது வீட்டில் தான் வளர்க்கும் கோழிகள் 28 குஞ்சுகள் பொறித்து உள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கால்நடைத்துறை மானிய கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் உதயசூரியன், இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கோழிகள் குஞ்சு பொறிப்பது இல்லை என்றும் கோழிக் குஞ்சுகள் வளர்க்க வழங்கப்படும் கூண்டுகள் சிறியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, இலவச கோழி வளர்ப்புத் திட்டத்தில் ஒரு நபருக்கு 25 கோழிகள் வழங்கப்படுவதாகவும், தனது வீட்டில் வளர்க்கப்படும் 2 கோழிகள் தலா 14 முட்டைகள் இட்டு, 28 குஞ்சுகள் பொறித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கோழி வளர்ப்புத் திட்டத்தில் வழங்கப்படும் கோழிகள் நல்ல கோழிகள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of