கொரோனா மருத்துவமனையில் அதிநவீன Wifi..! முதலமைச்சர் அறிவிப்பு..!

266

கொரோனா வைரசுக்கான சிறப்பு மருத்துவமனையை சென்னை கிண்டியில் முதலமைச்சர் பழனிச்சாமி இன்று துவங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து உரையாற்றினார். அப்போது

அவர் பேசியது பின்வருமாறு:-

“கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மிக சிறப்பான, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக இது கட்டப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அனைத்து வசதிகளும், இந்த மருத்துவமனையில் உள்ளது.

சிறப்பான முறையில் சிகிச்சை அளிப்பதற்காக, அனுபவம் வாய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 750 படுக்கை வசதிகளை கொண்ட இந்த மருத்துவமனையில், சிடி ஸ்கேன் உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளன.

ரூபாய் 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த கொரோனா சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் மனஅழுத்தத்தை போக்க, யோகா கூடம், அதி நவீன வைபை வசதிகள் மருத்துவமனையில் உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 95 கொரோனா ஆய்வககங்கள் மூலம், தினமும் 35 ஆயிரம் வரை கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கக்கூடிய அத்தனை உபகரணங்களும் அரசிடம் உள்ளது.

தமிழகத்தில் 57.89 சதவீதம் பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வந்துள்ளனர். சென்னை உட்பட பல்வேறு மாநகராட்சிகள், நோய்க்கான அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of