“கடும் நடவடிக்கை..” – தனியார் மருத்துவமனைகளை எச்சரித்த முதல்வர்

553

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா சிகிச்சை கட்டண விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும் என்றும், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.