SPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..! முதல்வர் அறிவிப்பு..!

3266

பல்வேறு ரசிகர்களை தனது காந்த குரலின் மூலம் 50-ஆண்டுகளுக்கும் மேலாக கட்டி வைத்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வைரஸ் தொற்று சரியான நிலையில், மற்ற பிரச்சனைகள் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்த நிலையில், நாளை காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மட்டுமின்றி, இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement