காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி – முதல்வர் உத்தரவு

637

சென்னை: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் தியாக உணர்வோடு செயல்பட்டு தமிழகத்தின் சேலத்தை சேர்ந்த மதியழகன் வீரமரணம் அடைந்தார்.

இந்நிலையில், ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தினரை மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உத்தரவிட்டுள்ளார்.

Advertisement