அமெரிக்கா செல்லும் துணை முதல்வரை வாழ்த்திய முதல்வர் | OPS | EPS

338

அண்மையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீண்டும் சென்னை திரும்பினார்.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தற்போது 10 நாள் அரசு முறைப்பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.

இந்நிலையில், அமெரிக்கா செல்ல இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்றார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்துக்கு சென்ற முதல்வர் பழனிசாமி, அவரது வெளிநாட்டுப் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement