கூட்டுறவு வங்கிகளில் தொடர் கொள்ளை – மூன்று பேர் கைது

525

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள கொல்லங்குடி பகுதியில் கொள்ளையர்கள் சிலர் பதுங்கி உள்ளதாக, காவல் துறைக்கு கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார் கல்யாணசுந்தரம், தனசேகர், தினேஷ்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

அவர்கள் மூவரும் சிவகங்கை மாவட்டம் அளவிடங்கான் கூட்டுறவு வங்கி, திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் கூட்டுறவு வங்கி, மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி ஆகிய கூட்டுறவு வங்கிகளில் கொள்ளையில் ஈடுபட்டதும்; பல இடங்களில் கூட்டாக வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார், கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.