மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை மின்உற்பத்தி பாதிப்பு

775

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மொத்தம் ஆயிரத்து 440 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்நிலையத்தை முழுமையாக இயக்குவதற்கு நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் கடந்த சில வாரங்களாக நிலக்கரி கையிருப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

74 ஆயிரம் டன் நிலக்கரி வர வேண்டிய நிலையில் தற்போது 24 ஆயிரம் டன் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கரி வரத்து குறைவால் மூன்றில் ஒரு பங்கு மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மூடும் நிலை உருவாகும் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகிறது, இரு தினங்களுக்கு முன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழக மின்நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுவதால்,
தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்க்கது.