நிலக்கரி கொள்முதல் விளக்க அறிக்கை

569

வெளிநாட்டில் இருந்து கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யவில்லை என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், கோல் இந்தியா நிறுவனத்திடம் இருந்து வாங்கும் நிலக்கரிக்கும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கும் இடையே தரத்தில் வேறுபாடு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறைந்த தரம் உள்ள நிலக்கரியுடன், தரம் உயர்ந்த நிலக்கரியை ஒப்பிட முடியாது என்பதால், அதன் விலையும் சற்று அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் போக்குவரத்து செலவுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொள்முதல் செய்யப்படும் ஒரு டன் நிலக்கரியின் விலை 3,655 ரூபாய் என்றும், ஆனால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி 3,150 ரூபாய் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டன்னுக்கு 505 ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன்னுக்கு 5 கோடியே 56 லட்சம் ரூபாய் மிச்சமாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தனியார் நிறுவனங்களிடம் அதிக விலைக்கு நிலக்கரியை கொள்முதல் செய்யவில்லை என்றும் அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.