செடிகளை கொளுத்திய ஆசாமிகள்..! – ஊருக்குள் புகுந்து மிரட்டிய மலைப்பாம்பு..!

478

மதுரை அருகே, நாகமலை புதுக்கோட்டை குடியிருப்புப் பகுதியிலிருந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று  ஊருக்குள் புகுந்து மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு  ஏற்பட்டது.

நாகமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய மலைப்பாம்புகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஓடைக்கு அருகே, யானைத்தட்டை போன்ற செடிகளுக்கு யாரோ தீ வைத்திருக்கிறார்கள். அதனால், உள்ளேயிருந்த பாம்பு வெளியே வந்துவிட்டது.


பின்னர் அந்தப் பாம்பு, கீழத்தெருவின் குடியிருப்புப் பகுதியின் பக்கமாக வந்துவிட்டதால், மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறை அதிகாரிகள், வன உயிரினங்களைப் பாதுகாக்கும் அமைப்பான ஊர்வனம் குழுவிற்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், ஊர்வனம் அமைப்பைச் சேர்ந்த சகாதேவன், விஷ்வா, பாஸ்கர், சாம்சன் கிருபாகரன் ஆகியோர் கீழத் தெருவுக்கு விரைந்துசென்று குடியிருப்புக்குள் தஞ்சம் புகுந்த மலைப்பாம்பை மீட்டு, பத்திரமாக வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

மீட்கப்பட்டது இந்திய மலைப்பாம்பு என்றும் அதன் நீளம் 10 அடிகள் இருந்ததாகவும், அதைப் பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டுவிட்டதாகவும் ஊர்வனம் குழு தெரிவித்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of