சாப்பாடு நல்லா இல்லை…! தூக்கில் தொங்கிய மனைவி!

272

கோவை இடிகரை அருகே உள்ள ஜெம் கார்டனை சேர்ந்தவர் தேவா. அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் பாதிரியராக உள்ளார். இவரது மனைவி தங்கம் என்கிற சரசு (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.நேற்று மதியம் தங்கம் உணவு சமைத்து தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பரிமாறிக் கொண்டு இருந்தார். அப்போது சாப்பாடு நன்றாக இல்லை என தேவா கூறி உள்ளார்.இதனால் தங்கம் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சமபவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.