கட்டணம் செலுத்த கோரி பெற்றோரை வற்புறுத்தக்கூடாது தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை…

94

கோவை: ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணத்தை செலுத்த சொல்லி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் நலிவடைந்து மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த சூழலில் நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையும், புத்தகத்திற்கான கட்டணத்தையும் செலுத்த கூறி சில தனியார் பள்ளிகள் பெற்றோரை வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த சூழலில் அவ்வாறு கட்டணம் செலுத்த கோரி பெற்றோர் நிர்ப்பந்திக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்து வகை தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் நடப்பாண்டிற்கான கல்வி கட்டணங்களையோ, நிலுவை கட்டணங்களையோ, அந்த நிலவை கட்டணத்திற்கான தாமத கட்டணங்களையோ செலுத்த கட்டாயப்படுத்த கூடாது என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாகவும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவது தொடர்பான அரசாணை விவரம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழலில் கல்விக் கட்டணத்தை செலுத்த கோரி நிர்ப்பந்திப்பது தமிழக அரசின் விதிமுறைகளை மீறுவதாக கருதப்படுகிறது. அவ்வாறு செய்யும் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

நெருக்கடியான காலகட்டங்களில் அரசின் அறிவுரைகள் மற்றும் அரசாணையை பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவது தனியார் பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமையாகும் என்பதை உணர வேண்டும் என்று அனைத்து பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of