அண்டார்டிக்காவை கடந்த முதல் வீரர்

616
andartica challenge

கொலின் ஓ’ப்ராடி என்பவர் சிறு வயதிலிருந்து மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். கடந்தாண்டு நவம்பர் மாதம் ஒரு பிரிட்டன் ரானுவ அதிகாரியுடன் நடந்த போட்டி தான் அண்டார்ட்டிக்காவை கடப்பதற்கு காரணம். அதில் கொலின் ஓ’ப்ராடி வெற்றி பெற்றுள்ளார்.  இதே மாதிரியான போட்டியில் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு ரானுவ அதிகாரி உயிரிழந்துள்ளார்.

அதிக ஆபத்துகளுடன், உரையும் வெப்பநிலையில் காட்சியளிக்கப்படும் இடம் தான் அண்டார்ட்டிகா. அந்த பகுதியை 57 நாட்களில் 1,482 கி.மீ தூரம் கடந்து சாதனை படைத்துள்ளார். தனது நாட்களை ஒவ்வொரு நாளும் தமது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவேற்றியுள்ளார்.

47 வது நாளில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்,

‘உலகின் மிகவும் குளிரான மற்றும் ஆபத்துகள் நிறைந்த பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 12-13 மணிநேரங்கள் 170 கிலோ எடை பனிச்சறுக்கு வாகனத்தை இயக்கினேன், சில நேரத்தில் தனது உடல் எடையை இழந்துவிட்டதாகவும், அதன் காரணமாக கைகள் மெலிந்து, கைக்கடிகாரம் கீழே விழுந்ததையும், தனது வெற்று உடலையும் கண்டு பயந்துள்ளேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of