கலாம் பெயரில் கல்லூரி – தமிழக பட்ஜெட்டில் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

274

2019-20 ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான உரையை ஓ.பன்னீர் செல்வம் வாசித்து வருகிறார்.

அதில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் கல்லூரி ஒன்று நிறுவப்படும் என்று தமிழக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரது பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of