கல்யாணம் ஆகி சில நாள் தான்..! அதிர்ச்சி கொடுத்த மனைவி..! காரணம் 61 வயது முதியவர்..!

922

சிவகங்கை மாவட்டம் பச்சேரி பகுதியை சேர்ந்த நபருக்கு, பில்லூர் பகுதியை சேர்ந்த கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில நாட்களிலேயே, கவிதா கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவருக்கு தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரிடம் விசாரித்தனர். இதில், சிவகங்கை நர்சிங் கல்லூரியில் நான் படித்த போது, அக்கல்லூரியின் முதல்வரும் பாஜக மாவட்ட நிர்வாகியுமான சிவகுரு துரைராஜ் (61 வயது) என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதனை வெளியே தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டினார் என்று கவிதா கூறினார். இந்த தகவலையடுத்து, கவிதாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், துரைராஜை நேற்று கைது செய்தனர். மாணவியை கல்லூரி முதல்வரே கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of