ஹெட்செட்டால் வந்த எமன்..! உடல் சிதறி கல்லூரி மாணவர் பலி..!

1075

திருவள்ளூர் ஆயில் மில் பகுதியை சேர்ந்தவர் மிதுன். கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவர், வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக இன்று காலை ரயில் நிலையம் சென்றுள்ளார்.

காதில் ஹெட்செட்டை அணிந்தவாறு மிதுன் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற சதாப்தி விரைவு ரயில் மோதியதில், கல்லூரி மாணவர் மிதுன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of