“3 கோடி தா.., அட்லீஸ்ட் 5 லட்சமாவது..,” மகா காமெடி செய்த கேங்ஸ்டர்ஸ்..!

787

வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கோகுல், 19 வயதான இவர், லத்தேரி அருகேயுள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்தவுடன் வெளியே வந்த கோகுலை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றுள்ளது.

பின்னர், கோகுலின் வீட்டாரை தொடர்பு கொண்டு 3 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, வள்ளிமலை அருகே வருமாறு கூறியுள்ளனர். இதனால் பதற்றமடைந்த கோகுலின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவனை மீட்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதற்கு அடுத்தப்படியாக, 3 கோடி ரூபாய் இல்லையென்றால் பரவாயில்லை..5 லட்சமாவது கொடுங்களேன் என்று அந்த கும்பல் கூறியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், திரைப்பட பாணியில் ஒரு பை முழுவதும் வெள்ளைக் காகிதங்களை நிரப்பி, பணம்போல் கட்டுக்கட்டாக வைத்து, கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்த கும்பல், பையில் இருந்தது பணம் என நினைத்து கொண்டு, கோகுலை விடுவித்துள்ளனர்.

பின்னர், அந்த கும்பலை கையும், களவுமாக கைது செய்து போலீசார் விசாரித்துள்ளனர். இதுவரையில், கடத்தல் கும்பல் என நாம் நினைத்து கொண்டிருந்தது, வேறுயாரும் இல்லை அதே கல்லூரியில் கோகுலுடன் படிக்கும் மாணவர்கள் என்பது தான் இந்த கதையில் ஏற்பட்ட திருப்பு முனை..

தங்களை பெரிய கேங்ஸ்டர் என நினைத்துக்கொண்டு அவர்கள் போட்ட பிளான், அதில் வெறும் குப்பை காகிதங்கள் மட்டுமே கிட்டியதும், எப்போதோ நாம் பார்த்த திரைப்படத்தை ஞாபகப்படுத்துவது போல் அமைந்தது.

மேலும், 5 ஸ்டார் ஹோட்டலெல்லாம் வேணா… குடிசையா இருந்தாலும் பராவயில்ல அப்டிங்கறத போல, 3கோடிலாம் வேணா… 5 லட்சம் இருந்தா கொடுங்க போதும்ன்னு கல்லூரி மாணவர்கள் கேட்டதுதான் உச்சக்கட்ட காமெடி..

காரு, பங்களா-ன்னு உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இந்த 3 கல்லூரி மாணவர்கள் போட்ட கிரிமினல் பிளான் கடைசியில் காமெடியாக முடிந்ததோடு மட்டுமல்லாமல்…கம்பி எண்ணும் நிலைக்கு அவர்களை தள்ளியிருக்கிறது….

Advertisement